பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
காஞ்சிபுரம்: தாமிரபரணி புஸ்கர விழா குறித்து, காஞ்சி சங்கர மடத்தில் நடந்த ஆலோசனை குழு கூட்டத்தில், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டத்தின் செழிப்புக்கு காரணமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில், வரும் அக்டோபர், 12ல் புஷ்கர விழா துவங்கி, 23 வரை நடைபெறுகிறது. இந்த புனித நீராடல் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து, காஞ்சி சங்கர மடத்தில் நேற்று, பல மடாதிபதிகள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், காஞ்சி சங்கராசாரியார் மற்றும் மரபு வழிபட்ட சைவ, வைணவ, வீர சைவ துறவியர் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.புஷ்கர விழாவின் தலைவராக, பெருங்குளம் செங்கோல் ஆதினகர்த்தர் சிவபிரகாச தேசிக சத்யஞான பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் வேளாக்குறிச்சி ஆதினகர்த்தர் சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், விழாவின் துணை தலைவர்களாக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன் மற்றும் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். சங்கர மடத்தில் நடந்த கூட்டத்திற்கு பின் நடந்த நுால் வெளியீட்டு விழாவில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், பாண்டியராஜன் கலந்து கொண்டார்.