பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
திருப்போரூர்: ஏழு வாரங்கள் நடைபெறும், ஆடி வார விழா, நெல்லிக்குப்பத்தில் நேற்று துவங்கியது. திருப்போரூர் அடுத்த, நெல்லிக்குப்பத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, முதல் ஆடிவார விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள், தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். அதே போல், ஓமவள்ளியம்மன் கோவிலிலும், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஆடி விழா, நேற்று நடந்தது. அம்மனுக்கு விஷேச அபிஷேகமும், பம்பை, உடுக்கை, கத்தி ஆயுதங்களுடன் வழிபாடும் நடந்தது. செம்பாக்கம் பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் திரிபுர சுந்தரி அம்மனை தரிசிக்க, பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.