பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
திருத்தணி: கன்னியம்மன் கோவிலில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஏரிக்கரை அருகே உள்ள கன்னியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு தீமிதி விழா, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நாடகம் நடந்தது.நேற்று காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர்.