பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
ஊத்துக்கோட்டை: ஜாத்திரையையொட்டி, மேளதாளம் முழங்க வந்த மாரியம்மனுக்கு, பக்தர்கள் படையலிட்டனர். ஊத்துக்கோட்டையில், 15ம் தேதி, ஜாத்திரை துவங்கியது. கிராம தேவதை செல்லியம்மன், அங்காளம்மன், எல்லையம்மன் ஆகிய கோவில்களில், ஒவ்வொரு நாளும், சிறப்பு வீதியுலா நடந்தது. கடந்த, 18ல், மண் பாண்டம் தொழில் செய்வோர், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, பக்தர்கள் அம்மனுக்கு படையல் வைப்பதற்காக, விளக்கேந்தி ரெட்டித் தெருவில் இருந்து மாரியம்மன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு, தாங்கள் எடுத்து வந்த கும்ப சாதத்தை அம்மனுக்கு வழங்கினர். வேப்ப இலை ஆடை அணிந்து, கோவிலைச் சுற்றி வந்து, நேர்த்திக் கடனை செலுத்தினர்.