கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கண்கொடுத்த வினாயகர் கோவிலில் சுந்தரர் குருபூஜை நடைபெற்றது. சைவ சமய நால்வர்களில் ஒருவரான சுந்தரர் குருபூஜை தினத்தையொட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.பின்னர் ஓதுவார்கள் ஏழாம் திருமுறையில் இருந்து பாடல்களைப் பாடினர்.அதனைத்தொடர்ந்து சுந்தரர் உருவச்சிலை கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தது.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும்,பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா நாராயணசாமி, அர்ச்சகர் சிவநேசன், உபயதாரர் கிருபானந்தம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.