பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
12:07
நரியம்பாக்கம்: நரியம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள, முந்தி பிடித்த முத்தாலம்மன் கோவிலில் கத்தி ஏறுதல் விழா நடைபெற்றது. படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சி, நரியம்பாக்கம் கிராமத்தில், முந்தி பிடித்த முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 18ம் ஆண்டு ஆடி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தொடர்ந்து, ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம், காப்பு கட்டியிருந்த பக்தர்கள் தீ மிதித்தனர். மேலும், அம்மன் கத்தி ஏறும் நிகழ்வும் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் வழிபட்டனர். அது போல, படப்பை அடுத்த மணிமங்கலம் ஊராட்சி, பாரதி நகரில் அமைந்துள்ள, தேவி கருமாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.