Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடாலயத்தில் அபூர்வ திரிசங்கு: 3௦௦ ... நரியம்பாக்கம் கோவிலில் கத்தி ஏறுதல் திருவிழா நரியம்பாக்கம் கோவிலில் கத்தி ஏறுதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 16ம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் 16ம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2018
12:07

பழநி: பழநியில் 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களை சிறைப்பிடித்தது, அவர்களை விடுவிக்க லஞ்சம் கொடுத்த தகவல்கள் போன்றவை உள்ளன.பழநி தொல்லியல்துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம், மானுாரைச் சேர்ந்த ஒருவர் செப்பேடு ஒன்றை கொடுத்தார். அதனை ஆய்வு செய்தபோது செப்பேடு 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது எனவும், அப்போது வாழ்ந்த குறுநில மன்னர் சங்குபிள்ளைக்கு ஊர்மக்கள் வழங்கியது எனவும் தெரிய வந்துள்ளது.

நாராயணமூர்த்தி கூறியது: செப்பேட்டின் இருபக்கமும் 175 வரிகள் உள்ளன. இதில் கி.பி.,16ம் நுாற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் தளபதி அரியநாதமுதலியார் பற்றிய தகவல்கள் உள்ளன. இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியவர்.பெண்கள் மீட்புகி.பி., 1551ல் சங்குபிள்ளை ஆட்சி செய்த வடப்பட்டி, ரெண்டப்புலியை அரியநாதமுதலியார் முற்றுகையிட்டு ஐந்து பெண்களை சிறைபிடித்து மதுரைக்கு கொண்டு சென்றார். சங்குப்பிள்ளை மதுரைக்கு ஆட்களை அனுப்பி 880 பொற்காசுகளை செலவழித்து, பெண்களை மீட்டார்.அதற்கு நன்றி கடனாக ஊர்மக்கள் சங்குபிள்ளைக்கு செப்பேடு வழங்கினர்.அதில் பிள்ளைமார் சமூகத்தினரும், மக்களும் சங்குபிள்ளைக்கு கடன்பட்டிருப்பதாகவும், கல்யாணத்துக்கு முன் பெண், மாப்பிள்ளை வீட்டார் தலா ஒரு பணமும், இறப்பிற்கு ஒரு பணமும் சங்குபிள்ளைக்கு காணிக்கையாக கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். இதை மீறினால் அவர்களை விலக்கி வைத்து, வீட்டை கொள்ளையிட்டு வெளியேற்றுவோம் என உள்ளது.அந்தகால லஞ்சம்சங்குபிள்ளையின் ஆட்கள் மதுரையில் பெண்களை மீட்க சென்றபோது, மதுரை கோட்டை வாசல் பிரதான காவலருக்கு 100 பொற்காசுகள் கொடுத்த பின்னர்தான் கோட்டைக்குள் செல்ல அனுமதித்துள்ளனர். இத்தகவலும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடக்கும் தேரோட்ட ... மேலும்
 
temple news
புட்டப்பர்த்தி; புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்ஸவம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
சென்னை; கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி தகடு போர்த்தி, புதிய அதிகார நந்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.47 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar