பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
03:07
செய்யூர்: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை, அந்த துறை, சரியாக பராமரிக்காததால், கோவில்கள் சீரழிந்து வருகின்றன. இதை, அப்பகுதி மக்கள் கண்டிக்கின்றனர். மதுராந்தகம், செய்யூர் தாலுகாகளில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பல கோவில்கள் உள்ளன. இவற்றில் பல கோவில்கள், தொன்மையானவை. இந்த துறையினர், கோவில்களை சரியாக பராமரிக்காததால், கோவில்கள் சீரழிந்து வருகின்றன. செய்யூர் கந்தசுவாமி கோவிலில் கொடிமரம் சாய்ந்து ஓராண்டிற்கும் மேலாகிறது. புதுப்பிக்க அதிகாரிகள் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இது, அபசகுணமாக உள்ளது என, ஆன்மிகப் பெரியோர் தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக இந்த கோவில் கொடி மரத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது போல, இத்துறையின் கீழள்ள அனைத்து கோவில்களையும் கண்காணித்து அந்தந்த கோவில்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.