வில்லியனுார்: கொம்பாக்கம் குப்பத்தில் முத்து மாரியம்மன் கோவில், 41ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று நடந்தது. கொம்பாக்கம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் 41ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு 26ம் தேதி காலையில் கரகம் சோடித்து மாலை கொடி யேற்று விழா நடந்தது. நேற்று 27ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 3:00 மணியளவில் நடந்த செடல் உற்சவத்தில்8 அடி அலகு குத்தியும், சுழல் ராட்டினம், டிராக்டர், கார் போன்றவைகளை பக்தர் கள்செடல் அணிந்து இழுத்து, நேர்த்திகடன் செலுத்தினர்.