திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ ஞானானந்தா நிகேதனில்‚ வியாச பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில்‚ வியாச பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு‚ நிகேதன் சத்சங்க மண்டபத்தில் சுவாமி நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமையில் வேதவிற்பனர்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் துவங்கியது. வேதத்தை நான்காக வகுத்து கொடுத்தவரும், கீதையை உள்ளடக்கிய ஐந்தாவது வேதம் எனப்படும் மகாபாரதத்தை இயற்றியவரும், வேதத்தின் குருவான வியாசராஜரின் நினைவாக இவ்விழா கொண்டாடப்பட்டது. குருபரம்பரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வேத சம்பரதாயங்களை மதித்து, அதனை பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என நித்யானந்தகிரி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.பூஜையில் சுவாமி பிரபாவனந்தா‚ சுவாமி ஆத்மதத்வானந்தா‚ சுவாமி அம்ருதேச்வரானந்தா கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்லுாரியின் ஓய்வுபெற்ற முதல்வர் சீனுவாசன்‚ திருச்சி தில்ஜித்சிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.