பெங்களூரு, ராமாயணத்தில் இடம் பெறும், 50 தலங்களை காணும் வகையில், ராமாயண யாத்திரையை, இலங்கை சுற்றுலா துறை துவக்கி உள்ளது.இந்திய சர்வதேச சுற்றுலா கண்காட்சி, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், நேற்று முன்தினம் துவங்கியது. தமிழகம், கர்நாடகா, கோவா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும், இலங்கை, துபாய் போன்ற நாடுகளும் பங்கேற்றன.நட்பு நாடுஇலங்கை அரசு சுற்றுலா துறை சார்பில், ராமாயண காவிய சுற்றுலா தலங்கள் தொடர்பான, www.srilanka.travel/ramayana/places.php என்ற இணைய தளத்தை, அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சர், ஜான் அமரதுங்கா நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் ஜான் அமரதுங்கா பேசியதாவது:இந்தியா, நெடுங்காலமாக இலங்கைக்கு நட்பு நாடாக உள்ளது. இரு நாடுகள் இடையே, கலாசாரம், இலக்கியம், பாரம்பரியத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது. இரு நாடுகளின் தற்போதைய பிரதமர்கள் சுமுகமாகவும், ஒற்றுமையாகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.ராமாயணத்தில் இடம் பெறும், 50 இடங்களை இலங்கையில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இந்த இடங்களை பார்ப்பதற்கு, ராமாயணா யாத்ரா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.இலவச விசாகடந்தாண்டு மட்டும், இரண்டு லட்சம் சுற்றுலா பயணியர் இந்தியாவில் இருந்து வந்தனர். இந்த ஆண்டு, ஜூன் வரை, 1.5 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.இந்திய மக்கள் தொகை, 125 கோடியாக உள்ளது. ஆனால், குறைவான மக்கள் மட்டுமே இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர்.பிறநாடுகளுக்கு செல்வதை விட, இலங்கைக்கு இந்தியர்கள் வர வேண்டும். அவர்களை உபசரிக்க ஆவலுடன் உள்ளோம்.இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணியருக்கு, இலவச விசா வழங்கப்படும். அதே சமயம், பாதுகாப்பு உறுதியும் அளிக்கிறோம்.ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து இயக்குவதற்கான முயற்சி எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்தியாவுக்கான இலங்கை துணை துாதர், கிருஷ்ணமூர்த்தி, இலங்கை எம்.பி., ஹர்ஷன் ராஜா கருணா உட்பட பலர் பங்கேற்றனர்.