சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2012 11:01
கடையநல்லூர்:சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயிலில் முதல் வருஷாபிஷேக விழா இன்று (28ம் தேதி) நடக்கிறது.கடையநல்லூர் அருகேயுள்ள சாம்பவர்வடகரையில் சபரிமலை வடிவமைப்பு கொண்ட சுவாமி ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முதல் வருஷாபிஷேக விழா இன்று (28ம் தேதி) நடக்கிறது. காலை 5 மணிக்கு கணபதி பூஜை, 6 மணிக்கு கோ பூஜை, 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் வருபிஷாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கோயில் 18 திருப்படி பூஜைகள் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை சாம்பவர்வடகரை ஐயப்பன் அடியார்கள் செய்துள்ளனர்.