ரவணசமுத்திரம் கோயிலில் நாளை தேர் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2012 11:01
ஆழ்வார்குறிச்சி:ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர் - மீனாட்சி அம்பாள் கோயில் தேர் திருவிழா நாளை (29ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ரவணசமுத்திரம் அக்ரஹாரத்தில் சொக்கலிங்கநாதர் - மீனாட்சி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு வரும் பிப்.6ம் தேதி தேர் திருவிழா நடக்கவுள்ளது. இதற்காக நாளை (29ம் தேதி) காலை 7.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது.தொடர்ந்து 10 நாட்கள் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகளும், சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளலும் நடக்கிறது. பிப்.6ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.7ம் தேதியான தைப்பூச திருநாளன்று தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில் கிராம மக்களும், கட்டளைதாரர்களும், பொதுமக்களும் செய்து வருகின்றனர். விழா நாட்களில் சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் கிருஷ்ணபட்டர் நடத்துகிறார்.