பதிவு செய்த நாள்
31
ஜூலை
2018
12:07
மேட்டூர்: பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதால், கோட்டையூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா இன்று நடக்குமா? என்ற குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர், காவேரிபுரம் ஊராட்சி, கோட்டையூரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் பூச்சாட்டு விழா நடத்தி, 15 நாட்களுக்கு பின் பண்டிகை நடத்தப்படும். கடந்தாண்டு, இரு தரப்பினர் இடையே மோதல் நீடித்த நிலையில், அப்போதைய சப்-கலெக்டர் மேகநாதரெட்டி, சமாதானம் செய்து பண்டிகையை நடத்த செய்தார். நடப்பாண்டிலும், கோவில் பண்டிகை நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே மோதல் நீடிக்கிறது. மேட்டூரில் ஆர்.டி.ஓ., ராமதுரை முருகன், நேற்று பேச்சுவார்த்தை நடத்தவிருந்தார். இரு தரப்பினரும், நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்த நிலையில், அறநிலையத்துறை அலுவலர்கள் வரவில்லை. இதனால், பேச்சுவார்த்தை ஜூலை, 31க்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று, உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே, இரவு மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடத்த முடியும்.