பதிவு செய்த நாள்
31
ஜூலை
2018
12:07
நாமக்கல்: நாமக்கல், சுயவேம்பு மாரியம்மன் கோவில் மண்டலாபி ?ஷக பூர்த்தி விழா, 4ல் துவங்குகிறது. நாமக்கல், அன்பு நகரில் சுயவேம்பு மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் கும்பாபி ?ஷகம் நடந்தது. மண்டலாபி ?ஷக பூர்த்தி சண்டியாக பெருவிழா, வரும், 4ல் துவங்குகிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, சங்கல்பம், பஞ்ச கவ்யம், பூதசுத்தி, சண்டி ஆவரண பூஜை, சண்டி பாராயணம். இரவு, 8:00 மணிக்கு சதுஷ் சஷ்டி, யோகினி, பைரவ பலி பூஜை, பிராத்தனை மற்றும் தீபாராதனை; மறுநாள் காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, வேத பாராயணம், லலிதா சகஸ்ராம பாராயணம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி மற்றும் பதிமூன்று அத்தியாயங்களினால், 700 ஸ்லோகங்களினால், சண்டியாக வேள்வி உள்பட பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. மதியம், 12:00 மணிக்கு அம்மனுக்கு கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை; மாலை, 5:00 மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.