தலைவாசல்: மாரியம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் நடந்தது. தலைவாசல், மணிவிழுந்தான் தெற்கில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதை முன்னிட்டு, நேற்று காலை பால்குட ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஊர்வலம், கோவிலில் நிறைவடைந்தது. இதையடுத்து, மாலையில் அம்மனுக்கு கூழ் ஊற்றியதுடன், ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. முக்கிய நிகழ்வாக, மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதியுலா கொண்டு வரப்பட்டது. சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.