மயிலம் : மயிலம் மலை மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் நடந்தது. மயிலம் மலையடிவாரத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு எட்டு நாள் விழா கடந்த 25 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம் வழிபாடு மகா தீபாராதனை நடந்தது. தினசரி அம்மனுக்கு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. ஏழாம் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், மயிலம் தமிழ்க் கல்லுாரியினர் செய்திருந்தனர்.