பதிவு செய்த நாள்
03
ஆக
2018
12:08
தர்மபுரி: கடத்தூர் அடுத்த, நல்லகுட்லஹள்ளி திரவுபதி அம்மன் கோவிலில், ஜூலை, 17ல், காலை, 5:00 மணிக்கு, மஹா கணபதி ?ஹாமம், கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா துவங்கியது. கடந்த, 20ல், காலை, 5:00 மணிக்கு, 108 கலச பூஜை செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை, 11:30 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம், 108 சங்காபி?ஷக பூஜையும், மாலை, 5:00 மணிக்கு, அம்மன் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு, கங்கை பூஜை, சக்தி அழைப்பு, 9:00 மணிக்கு, அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 10:30 மணிக்கு, தருமராஜர், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.