பதிவு செய்த நாள்
03
ஆக
2018
12:08
திருவண்ணாமலை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், 2,300 பால் காவடிகள் தயார் நிலையில் உள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடக்கும். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அப்போது, வேண்டுதலுக்காக பக்தர்கள், பால் காவடி எடுப்பது வழக்கம். இந்தாண்டு, ஆடி கிருத்திகை வரும், 5ல் நடக்கிறது. இதற்காக, அருணாசலேஸ்வரர் கோவில், சுந்தரேசர் சன்னதி அருகே, 2,300 பால் காவடிகள் சீரமைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரும், 5ல் காலை, 9:00 மணிக்கு, கோவிலில் உள்ள பழனியாண்டவர் சன்னதியில் இருந்து, 2,300 பால் காவடி ஊர்வலம் புறப்படும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.