சின்னமனுார்: தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரர் - நீலாதேவி கோவிலில் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. குச்சனுார் சனீஸ்வரர் கோவில், ஆடி சனிவார பெருந்திருவிழா, ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சனீஸ்வரர் - நீலாதேவி திருக்கல்யாணம் இன்று மதியம், 12:30 மணிக்கு நடக்கிறது.நாளை மூன்றாவது ஆடி சனிவாரத்திருவிழா நிறைவடைந்த பின், மூலவருக்கு மஞ்சனக்காப்பு சாத்துபடி செய்யப்படும். நல்லெண்ணெய், மஞ்சள், எலுமிச்சை சாறு, வெண்காரம், படிகாரம் மற்றும் மூலிகை கலந்து, சுயம்பு மூலவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுக்கப்படும்.