விருதுநகர் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2018 11:08
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்றிரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஆக., 5 ல் காலை 7:31 மணிக்கு பால்குடம், தீர்த்தம், சந்தனக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி , 108 சங்காபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆக., 6 ல் தீச்சட்டி எடுத்தல், பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் வருதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் மாரியப்பன், செயலாளர் சப்பையா செய்து வருகின்றனர்.