பதிவு செய்த நாள்
04
ஆக
2018
12:08
சென்னை: வேளச்சேரியில் உள்ள, கணபதி சச்சிதானந்த சுவாமி ஆசிரமத்தில், மைசூர் அவதாத தத்த பீடத்தின் இளைய பீடாதிபதி, தத்த விஜயானந்தரின் சாதுர்மாஸ்ய விரதம், சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள, கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தில், தத்த விஜயானந்த தீர்த்த சுவாமியின், 15வது சாதுர்மாஸ்ய விரதத்தை, ஜூலை, 27ல் துவங்கினார். இவ்விரதம், செப்., 25ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. விரதத்தில், அவரின் உபன்யாசம் நடைபெறுகிறது. மேலும் இன்று, நட்சத்திர சாந்தி யாகம் துவங்குவதால், பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன.இன்று, அஸ்வினி நட்சத்திரத்தில் துவங்கி, 30ம் தேதி, ரேவதி நட்சத்திரம் வரை, தினமும் அந்தந்த நட்சத்திரத்திற்கு, பரிகார ஹோமங்கள் செய்யப்படும்.பக்தர்கள், இந்த சாதுர்மாஸ்ய விரத நிகழ்ச்சியில் பங்கேற்று, அருள் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 96000 03651, 98840 27739 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.