பதிவு செய்த நாள்
04
ஆக
2018
12:08
ஆர்.கே.பேட்டை:எல்லையம்மன் கோவில் வளாகத்தில் சுயம்புவாக தோன்றியுள்ள நாகாலம்மன் கோவிலுக்கு, நேற்று, ஆடி வெள்ளியில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் கிராம எல்லையம்மன் கோவில். கிராம தேவதையான எல்லையம்மன் கோவில் வளாகத்தில், சமீபத்தில் கான்கிரீட் தளத்தை பெயர்த்து கொண்டு புற்று உருவானது. அதை தொடர்ந்து அந்த இடத்தில் நாகாலம்மன் கோவில் எழுப்பப்பட்டது. நேற்று, ஆடி வெள்ளிக்கிழமையில், காலை 9:00 மணிக்கு நாகாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு, திரளான பெண்கள் கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம், 1:00 மணியளவில், எல்லையம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. மாலை, 3:00 மணியளவில், கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டனர். மாலை 6:00 மணிக்கு, உற்சவர் எல்லையம்மன், உள்புறப்பாடு எழுந்தருளினார்.