சின்னாளபட்டி : அம்பாத்துரை குப்பம்மாள், சுண்டெலி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கின. முகூர்த்தக்கால் ஊன்றிய பின் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. முதல் நாள் காலை மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜைகள் நடந்தன. இரவில் அஷ்ட பந்தனம், சிலை பிரதிஷ்டை நடந்தது. மறுநாள் காலை திருப்பள்ளியெழுச்சி, திருமுறை பாராயணம் நடந்தது. மகா பூர்ணாகுதி, நாடி சந்தானம், கும்பம் எழுந்தருளல் நிகழ்ந்தன. பின் கோயில் விமானத்தில் மூலவர், சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாக குழு மற்றும் கும்பாபிஷேக விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.