திருப்புத்தூர் : திருப்புத்தூர் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் 50 ஆண்டுகளுக்குப்பின் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த ஜன.26ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது.தொடர்ந்து நேற்று இரவு 5ம் கால சாற்று முறை பூஜை நிறைவடைந்தது. இன்று காலை 6.30 மணிக்கு பிரதான ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகின்றன. 8.30 மணிக்கு பூர்ணாகுதி,பின்னர் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிந்த புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடக்கும்.காலை 10.10 மணிக்கு மூலவர்,தாயார், சக்கரத்தாழ்வார் விமான கலசங்கள்,ராஜகோபுரகலசங்கள் உள்ளிட்ட கலசங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 6ம் கால சாற்று முறை பூஜை நடைபெறும். பகல் 11 மணிக்கு பிரசாதம் வழங்கலும், 12 மணிக்கு யஜமான மரியாதையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு கருடசேவையுடன் கும்பாபிஷேகம் நிறைவு பெறும்.