பதிவு செய்த நாள்
04
ஆக
2018
12:08
திருத்தணி: மாத்தம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி நகராட்சி, 21வது வார்டு, குமாரகுப்பம், அருந்ததியர் பாளையம் கிராமத்தில் உள்ள மாத்தம்மன் கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து பூஜை, மாலையில் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று, காலை, 7:30 மணிக்கு, கலச ஊர்வலம் மற்றும் புதியதாக நிறுவப்பட்ட சிலைக்கு கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, மூலஸ்தான அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.