பதிவு செய்த நாள்
07
ஆக
2018
11:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பாலமுருகன் கோவில், 41ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா, கடந்த, 1ல் துவங்கியது. காலை, முருகனுக்கு அபிஷேகமும் புண்ணியாவர்தனையும், கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல், சேவல் கொடி ஏற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளும், வெள்ளி வேல் ஊர்வலமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 4:00 மணிக்கு, முருகனுக்கு அபிஷேகம், சந்தன காப்பும், தீபாராதனை, தீர்த்தப் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, மேடையில், இரண்டு பக்தர்கள் மீது குந்தாணி வைத்து, மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், இருவரும் முதுகில் அலகைக் குத்திக் கொண்டு, 20 அடி உயரத்தில் தொங்கியபடி சென்று, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். பல்வேறு பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.