பதிவு செய்த நாள்
09
ஆக
2018
11:08
ஈரோடு: கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஈரோடு, பெரியார் நகர் பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி கோவில், கன்னிமார், ஏரிக்கருப்பண்ணசாமி, மகா முனியப்பன் பொங்கல் திருவிழா, கடந்த, 7ல், தொடங்கியது. தொடக்க நாள் விழாவில், பக்தர்கள் காவிரி சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பஞ்சமுக கணபதி, கன்னிமார், கருப்பண்ணசாமிக்கு அபி ?ஷகமும் நடந்தது. மதியம் உச்சிகால பூஜை, மகா முனியப்பனுக்கு அசைவ படையல் செய்யும் பூஜை நடந்தது. மாலையில் உற்சவர் திருவீதி உலா நடந்தது. இதில், வேண்டுதல் வைத்திருந்த பெண்கள் பலர் பொங்கலிட்டு கருப்பண்ணசாமியை வழிபட்டனர். இன்று மறுபூஜை நடக்கிறது.