அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்திபெற்ற குருநாதசுவாமி கோவில் பண்டிகை கடந்த, 8 ல், தொடங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, நாட்டு காளை மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. தொடர்ந்து மாடுகளின் ரேக்ளாவும் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் ரசித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.