ஊத்தங்கரை: ஊத்தங்கரை முனியப்பன் கோவில் ஆடி திருவிழாவில், 500 ஆடுகள் பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊத்தங்கரை மகாமுனியப்பன் கோவில் ஆடித் திருவிழா, கடந்த, நான்கு நாட்களாக நடந்து வருகிறது. இதையொட்டி, விநாயகர் மற்றும் மகா முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கரகம் எடுத்தும், வேல் எடுத்தும், பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். 2,000 கோழி, 500 ஆடுகளை பலியிட்டு, வேண்டுதலை நிறைவேற்றினர். ஊத்தங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.