பதிவு செய்த நாள்
10
ஆக
2018
02:08
ஆத்தூர்: ஆத்தூர், கைலாசநாதர் கோவில் செயல் அலுவலர் சுரஷே்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆக., 13ல், காமாட்சி அம்மனுக்கு, 47வது ஆண்டு ஆடிப்பூர வளைகாப்பு உற்சவ விழா நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு அபிஷேகம், 108 சங்காபிஷேகம், அம்மனுக்கு வளையல் அணிவித்தல் நடக்கும். மங்கள பொருட்களுடன், சுமங்கலி பெண்களுக்கு வளையல் கொடுப்பது வழக்கம். அதனால், கைக்கு இரண்டு வளையல் வீதம், மங்கள பொருட்களை, பக்தர்கள் வழங்கலாம். வளையல்களால் அலங்கரிக்கப்படவுள்ளதால், டஜன் கணக்கில், பெண்கள், ஆக., 10ல்(இன்று), கோவிலுக்கு வந்து வழங்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.