பதிவு செய்த நாள்
11
ஆக
2018
03:08
பென்னலுார், பென்னலுாரில், சிதிலமடைந்துக் காணப்பட்ட, அகத்தீஸ்வரர் கோவிலை, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில், ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையான இக்கோவில் மீது மரங்கள் வளர்ந்து, புதர்மண்டி, சிதிலமடைந்துக் காணப்பட்டது. சிவ தொண்டர்கள் இணைந்து, நன்கொடையாளர்கள் உதவியுடன் கோவிலைச் சீரமைக்க திட்டமிட்டனர். கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை, 2016ல் துவக்கினர். கோவிலில் இருந்து அகற்றப்பட்ட, கற்களின் மீது வரிசை எண்கள் எழுதி பத்திரப்படுத்தப்பட்டன. பின், அதே கற்களை, இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்து கோவில் கட்டும் பணிகள் நடைபெற்றன. தற்போது, கோவில் மண்டபம், விமானம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. 80 சதவீதம் பணிகள் முடிந்து, எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக, திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.