துாக்கனாம்பாக்கம்: நல்லாத்துார் வரதராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா இன்று 13ம் தேதி நடக்கிறது. வில்லியனுார் அடுத்துள்ள வரதராஜபெருமாள் கோவிலில், இன்று ஆடிப்பூர உற்சவம் நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 10 மணிக்கு தாயார் திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு தாயார் ஆண்டாள் திருக்கோலத்தில் சன்னதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இதைதொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும் 17ம் தேதி, இரவு 7 மணிக்கு புஷ்பாங்கி சேவை உற்சவம் நடக்கிறது. முன்னதாக காலை 10 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சன்னதி புறப்பாடு நடக்கிறது. இக்கோவிலில் 8 வெள்ளிக்கிழமை தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.