பதிவு செய்த நாள்
13
ஆக
2018
01:08
மண்டலமாணிக்கம் : மண்டலமாணிக்கம் வாழவந்தம்மன் கோவில் ஆடித்திருவிழா ஆகஸ்ட் முதல் தேதியில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கும்பம் எடுத்தல், சிறப்பு பூஜைகள், அலங்காரம், அபிஷேகம், ஆராதனை, நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை அம்மனுக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டு, முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று குண்டாற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கமுதி, மண்டலமாணிக்கம், புதுக்குளம், வலையபூக்குளம், கழுவன்பொட்டல், இடைச்சூயூரணி, பெருமாள்தேவன்பட்டி உட்பட பல கிராமங்களிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.