கன்னிமாரியம்மன் கோவில் பூகுண்ட உற்சவ விழா பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2018 01:08
குன்னுார்: குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் செல்லும் பாதையில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூகுண்ட உற்சவ விழா துவங்கியது.குன்னுார் அருகே கன்னிமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 26வது ஆண்டு பூகுண்ட உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை, 10:00 மணிக்கு சமயபுர மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கம்பம் சாட்டுதல், திருக்கல்யாணம், கரக ஊர்வலம் ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து சமயபுர மாரியம்மன், மதுரை வீரன், சுயம்பு வனபத்ரகாளியம்மன் கன்னிமார் கோவிலில் இருந்து அபிஷேக ஆராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. மாலை, 6:30 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் சேவா சங்க இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், 26வது ஆண்டு பூகுண்ட உற்சவ விழா நடந்தது. நேற்று அம்மன் திருவீதி உலா மற்றும் கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.