திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் (ஆக.,16) காலை 10.16 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது. இதற்காக 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நேற்றுமுன்தினம் தொடங்கியது. ஏழுமலையான் மூலவரின் ஜீவசக்தி உள்ள தங்க கலசத்தில் பூஜைகள் செய்வதற்காக, தேவஸ்தானம் 300 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட தங்க தர்ப்பையை தயார் செய்துள்ளது. இந்த காலத்தில் வேத சம்பிரதாய சடங்குகள் நடக்கும் காரணத்தால், கிடைக்கப்பெறும் குறைந்தளவு காலத்தில் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையான யாத்ரீகர்களுக்கு மட்டும் தரிசனம் சாத்தியமாகும். 16 ஆம் தேதி வரை பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் இலவச தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.