திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2018 11:08
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் ஆக.,4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று காலை தேரோட்டத்தை முன்னிட்டு காலை 9:30 மணி அளவில் ஆண்டாளும் பெருமாளும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய பெருமாளை அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இன்று காலை 9:00 மணி அளவில் தீர்த்தவாரியும், மாலையில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளலுடன் உற்ஸவம் நிறைவடையும்.