பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
கரூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கரூரில், விநாயகருக்கு அரிசி, வெண்ணையால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கரூர், மாரியம்மன் கோவில் தெருவில், விஸ்வகர்மா விநாயகர் கோவிலில், ஆடிப்பூரம் முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன் பின், மூலவருக்கு அரிசி மாவு, வெண்ணைய், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன் கோவில் சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.