Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... உடுமலை கோவிலில் ஆடி மாத விழா உடுமலை கோவிலில் ஆடி மாத விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை, நயினார்கோவிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருவாடானை, நயினார்கோவிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
12:08

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. திருவாடானை சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா ஆக.4ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று நடந்தது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் மணமக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 11:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், தீபாராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தேவஸ்தான  மகேந்திரன், செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை ஊஞ்சல் உற்ஸவமும் மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.
பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், ஆடிப்பூர திருக்கல்யாண விழா நடந்தது. ஆக., 3 அன்று இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியும், ஆக., 4ல் காலை 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. அன்று இரவு தொடங்கி, தினமும் நாகநாதசுவாமி, சவுந்தர்யநாயகி அம்மன் இந்திர விமானம், பல்லக்கு, அன்ன, சிம்ம, கமல, குதிரை, காமதேனு வாகனங்களில் வீதிவலம் வந்தார். ஆக., 12ல் காலை 8:00 மணிக்கு அம்மன் தேரோட்டமும், ஆக., 14ல் அம்மன் தபசு மண்டபம் எழுந்தருளி, இரவு புஷ்ப பல்லக்கில் வீதிவலம் வந்தார். நேற்று காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நாகநாத சுவாமிக்கும் – சவுந்தர்யநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இரவு மின்தீப தேர், தென்னங்குருத்து தேரில் சுவாமி, அம்மன் வீதி வலம் வந்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar