திருநீர்மலை கோவிலில் ரத சப்தமி ஏழு வாகனங்களில் பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2012 11:01
திருநீர்மலை : ரங்கநாத பெருமாள் கோவிலில், ரதசப்தமி விழாவில், ஏழு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடந்தது. நூற்று எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவிலில் ரத சப்தமி பெருவிழா நேற்று நடந்தது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடப்பதை போன்று சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ரங்கநாதர் எழுந் தருளினார். தொடர்ந்து அனுமந்த வாகனம், கத வாகனம், சேஷ வாகனம், அம்ச வாகனம் உட்பட ஏழு வாகனங்களில் மலையை சுற்றியுள்ள மாடவீதிகளில் ஆபரண அலங்காரத்துடன் பெருமாள் உலா நடந்தது. பகல் 1 மணிக்கு கோவிலுக்கு எதிரே உள்ள புனித நீர் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. விழாவையொட்டி, அலங்காரத்தில் மூலவர்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நீர்வண்ண பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாண்டியராஜு, பரம்பரை அறங்காவலர் சரோஜினி வரதப்பன் ஆகியோர் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.