பெரியகுளம் : பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு ராதை, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலையில் திருப்பாவையை பக்தர்கள் மூன்று முறை சேவித்தனர். துளசி பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணசைதன்யதாஸ், ஆண்டாள் கல்யாணம் குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினார். பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.