பழநி, பழநி முருகன்கோவிலைச் சார்ந்த, மாரியம்மன்கோவில் புதியதேர் செய்யும் பணி முடிந்து, வரும், 23ல் நான்கு ரத வீதியில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.பழநி கிழக்கு ரதவீதியிலுள்ள மாரியம்மன்கோவிலில், மாசித்திருவிழா விமரி சையாக கொண்டாடப் படுகிறது. இக்கோவிலுக்கு என தனியாக தேர் இல்லாத காரணத்தால், மாசிமாத மாரியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு, பெரியநாயகியம்மன் கோவில் தேர் பயன்படுத்துகின்றனர். மாரியம்மன்கோவிலுக்கு தனியாக, 18லட்சம் ரூபாய் செலவில், 14.3அடிஉயரம், 9.8அடி நீளம் கொண்ட தேர் ஆகம விதிகளின் படி வடிவமைக்கும் பணிகள் முடிந்துள்ளது.வரும், 23ல் சிறப்பு பூஜை செய்யப்பட்டு நான்கு ரத வீதியில் புதிய தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.