திருப்புவனம்: திருப்புவனம் அருகே கொந்தகை ராமநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கொந்தகை கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமேஸ்வர ராமநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திருப்பணி நடந்து வந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 15ம் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. காலை 9:10 மணிக்கு வெங்கட்ரமணசர்மா மற்றும் விஸ்வமூர்த்தி சிவாச்சார்யார்கள் கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடந்தது.