பதிவு செய்த நாள்
18
ஆக
2018
01:08
கரூர்: ஆவணி முதல், தேதியை முன்னிட்டு வேம்புமாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கரூர், பசுபதிபுத்திலுள்ள வேம்பு மாரியம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பின், கரூரில் தொழில் வலம் பெறவும், உலக நன்மைக்காகவும் அம்மனுக்கு, 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தனலட்சுமி அலங்காரத்தில் அம்மனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.