வாழப்பாடி: வாழப்பாடி அருகே, சின்னம்மநாயக்கன்பாளையத்தில், பெருமாள் கோவில் உள்ளது. அங்கு, பக்தர்கள், மக்கள் ஒத்துழைப்புடன், ராஜகோபுரம், குறிஞ்சி கோபுரம், மகா மண்டபம் உள்பட, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. நேற்று காலை, அதன் கும்பாபி ?ஷக விழா கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார். திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, திருக்கல்யாணம் நடந்தது.