பதிவு செய்த நாள்
18
ஆக
2018
01:08
ஓசூர்: ஓசூர், ஓம்சக்தி கோவிலில் இருந்து, பக்தர்கள் கஞ்சி கலயம், முளைப்பாரி, தீச்சட்டி ஆகியவற்றை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில், ஓம்சக்தி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் அம்மனை வழிபடுவது வழக்கம். இந்தாண்டு ஆடி மாதத்தை முன்னிட்டு, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கஞ்சி கலயம், முளைப்பாரி, தீச்சட்டி ஆகியவற்றை ஏந்தி, ஏரித்தெரு, எம்.ஜி.,ரோடு வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். சில பெண்கள் அம்மன் வேடமிட்டு, ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.