பழநி : ஆவணி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் யாகபூஜை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆவணி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் ஆனந்தவிநாயகருக்கு அபிஷேகம் யாகபூஜை செய்து, விநாயகர் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திருச்சியைச் சேர்ந்த பக்தர்கள் உடலில் அலகு குத்தி கிரிவீதியை வலம்வந்து மலைக்கோயிலில் சாமிதரிசனம் செய்தனர். இதேப்போல காவடிகள், பால்குடங்கள் எடுத்துவந்துபக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருஆவினன்குடிகோயிலில் துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெரியநாயகியம்மன்கோயில், மாரியம்மன்கோயில், பெரியாவுடையார் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.