பதிவு செய்த நாள்
18
ஆக
2018
01:08
சேலம்: கஞ்சி கலயத்தை சுமந்து வந்த பக்தர்கள், ஆதிபராசக்திக்கு படையலிட்டனர். சேலம், ராமகிருஷ்ணா சாலை, சுயம்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூர விழா, நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, கஞ்சி கலய ஊர்வலம், காலை, 9:50 மணிக்கு, வட அழகாபுரம், திரவுபதியம்மன் கோவிலில் தொடங்கியது. விரதமிருந்து, செவ்வாடையில் ஏராளமான பெண்கள், கஞ்சி கலயத்தை, தலையில் சுமந்து வந்தனர். அப்போது, ஓம் சக்தி தாயே, பராசக்தி என, பக்தி முழக்கமிட்டது, மெய்சிலிர்க்க வைத்தது. சாரதா கல்லூரி சாலை, ராமகிருஷ்ணா சிக்னல் சந்திப்பு வழியாக வந்த ஊர்வலம், 10:20 மணிக்கு, கோவிலை அடைந்தது. பின், கஞ்சியை அம்மனுக்கு படையலிட்டு, பூஜை செய்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள், ஒவ்வொருவராக, அம்மனுக்கு பாலாபி ?ஷகம் செய்து வழிபட்டனர். பின், விசஷே பூஜை செய்து, அம்மன், தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.