பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2018 12:08
கீழக்கரை:பெரியபட்டினத்தில் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. ஜலால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மாலை 4:30 மணிக்கு தொடங்கி மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்டதேரில் கொடி ஊர்வலம் மாலை 6:00 மணிக்கு நடந்தது. மவுலீது எனும் புகழ்மாலை ஓதி துஆ செய்தனர்.கொடியேற்றம் செய்யப்பட்டது. வரும் ஆக., 28 மாலை முதல் கலை நிகழ்ச்சிகளும் மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலமும், மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக்கும். செப்., 7 அன்று மாலை கொடியிறக்கம் செய்யப்படும். சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்முதீன், துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, எம்.களஞ்சியம், கே.சாகுல்ஹமீது, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது உட்பட பலர் பங்கேற்றனர்.