ரெகுநாதபுரம்:சபரிமலையில் ஆவணியில் முதல் 5 நாட்கள்நடைதிறக்கப்பட்டு நடக்கும் விசேஷ பூஜைகளில்ஐயப்ப பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில்சபரிமலைக்கு மாலையணிந்து விரமிருந்து செல்லும பக்தர்கள் வெள்ளப்பாதிப்பு காரணமாக செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல முடியாத உள்ளூர் பக்தர்கள் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.